ADDED : ஏப் 27, 2026 02:09 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அருகே வாசிக்கவுண்டனுாரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமுதா, 45. கூலித்தொழிலாளி. இவர் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த, 22ம் தேதி கோவையில் இருந்து தேர்தலில் ஓட்டளிக்க வேண்டி சொந்த ஊருக்கு வந்தார். அன்றிரவு, 11:00 மணியளவில் ரேஷன் கடை முன்
நின்றிருந்தார்.
அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி லோக-நாதன், 48, பாரி, 65, விருத்தாசலம், 55, சக்திவேல், 52, பிரவீன், 24, கல்லுாரி மாணவர் நவீன், 24, பிரதீப், 24, இன்ஜினியர் பிரேம், 23, குணசேகரன், 48, உள்ளிட்டோர் சேர்ந்து அமு-தாவை, 'ஓட்டு போட பணம் வாங்க வந்தாயா' எனக்கேட்டு தக-ராறு செய்து, தகாத வார்த்தையால் திட்டி, அனைவரும் சேர்ந்து, சரமாரியாக தாக்கி, சேலையை கிழித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அமுதா சிகிச்சைக்கு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் புகார் படி பொம்மிடி போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று முன்தினம் லோகநாதன், பாரி ஆகிய இருவரையும் கைது செய்து மற்ற, 7 பேரை தேடி வருகின்றனர்.
