/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
14 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
/
14 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜன 19, 2025 07:00 AM
தர்மபுரி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சேலம் டி.எஸ்.பி., வடிவேல் தலைமையில், கிருஷ்ணகிரி சிறப்பு சுற்று எஸ்.ஐ., பெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்ட பறக்கும் படை துணை தாசில்தார் பிரபு ஆகியோர் சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று தர்மபுரி அடுத்த, ஏ.ரெட்டிஹள்ளி பகு-தியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலத்திலி-ருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 14 டன் ரேஷன் அரிசியை, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தியது தெரிந்தது. வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், வாகனத்தின் உரிமையாளரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, முஸ்லிம் தெருவை சேர்ந்த சையத் மவுலா, 44, ஓட்டுனர் ஓசூரை சேர்ந்த மணிவண்ணன், 38 ஆகிய இருவரை கைது செய்தனர்.