ADDED : செப் 23, 2026 07:01 AM
அ நிறம் | அளவு
நல்லம்பள்ளி:கம்மம்பட்டி
பஞ்.,க்கு உட்பட்ட பாப்பம்பட்டி காட்டுவளவு கிராமத்தை சேர்ந்த
விவசாயி செல்வராஜ், 50. இவர் ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் செய்து
வந்தார். நேற்று முன்தினம் இரவு, கம்மம்பட்டி சுற்று வட்டார
பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
அப்போது, மாட்டு
கொட்டகை அருகிலிருந்த மின் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததில், மின்
கம்பி மாடுகள் மீது விழுந்தது. இதில், இரு மாடுகளும் மின்சாரம் தாக்கி
சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்த தகவலின் படி,
வருவாய்த்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர், சம்பவ இடம்
சென்று விசாரித்தனர்.
