/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிப்பர் லாரி கார் மீது மோதி 2 பேர் பலி
/
டிப்பர் லாரி கார் மீது மோதி 2 பேர் பலி
ADDED : நவ 22, 2024 01:24 AM
டிப்பர் லாரி கார் மீது மோதி 2 பேர் பலி
ஓசூர், நவ. 22-
தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூருக்கு, எம்.சாண்ட் மணல் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி நேற்று காலை, 5:00 மணியளவில் வந்தது. பி.செட்டிப்பள்ளியில் தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர மரத்தில் மோதி வலப்பக்கம் திரும்பியது. அப்போது ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை சென்ற ஹூண்டாய் கார் மீது மோதியது.
காரில் பயணித்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சீனிவாசன் மனைவி கவிதா, 43; நட்ராஜ் என்பவரின் ஒன்றரை வயது மகன் சோம்குகன் பலியாகினர். காயமடைந்த நடராஜ், 33, அவர் மனைவி அபிராமி, 25, பிரபாகரன், 24, ஆகியோரை ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டிப்பர் லாரி டிரைவரை, கெலமங்கலம் போலீசார், தேடி வருகின்றனர்.