ADDED : ஏப் 17, 2026 02:19 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்-குனர் புவனமாணிக்கம் மற்றும் கனிம வளத்துறை ஆர்.ஐ., ராஜிவ்காந்தி ஆகியோர் கடந்த, 12 அன்று அதிகாலை, 3:00 மணிக்கு தர்மபுரி அடுத்துள்ள செட்டிகரை அருகே, வாகன சோத-னையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது அதன் டிரைவர், வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி னார். வாகனத்தை சோதனை செய்ததில், 2 யூனிட் கிராவல் மண் இருந்தது தெரிந்தது. டிப்பர் லாரியை கைப்-பற்றி அதிகாரிகள், தர்மபுரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
அதே போல், 12ம் தேதி நள்ளிரவு, 1:30 மணிக்கு அதியமான்-கோட்டை அருகே, சின்ன நுாலஹள்ளி ஏரிக்கரை வழியாக, 2 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதியமான்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
