/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை அமைக்க வலியுறுத்தி 2 மலைகிராம மக்கள் தர்ணா
/
சாலை அமைக்க வலியுறுத்தி 2 மலைகிராம மக்கள் தர்ணா
ADDED : நவ 05, 2024 01:21 AM
சாலை அமைக்க வலியுறுத்தி
2 மலைகிராம மக்கள் தர்ணா
தர்மபுரி, நவ. 5-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, வட்டுவனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை அமைக்க, தொடர்ந்து, கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சாலை அமைக்க மத்திய அரசு, வனத்துறை உள்ளிட்டவற்றின் அனுமதி, கடந்த சில மாதங்களுக்கு முன் கிடைத்தது.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் சார்பாக, அரசுக்கு செலுத்த வேண்டிய, 2.50 கோடி ரூபாய் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால், சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், கோட்டூர், ஏரியூர் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து கடும் அவதியடைந்து வந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த தொடக்க பள்ளியும் செயல்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த, 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாக, 50க்கும் மேற்பட்டோர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டரை, 5 பேர் மட்டும் சென்று சந்திக்கலாம் என போலீசார் கூறியதால், ஆத்திரமடைந்த மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, 10 பேர் மட்டும் கலெக்டரை சந்திக்க
அனுமதித்தனர்.

