/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
/
சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
சந்தன மரத்தை வெட்டி விற்ற 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்
ADDED : பிப் 10, 2025 01:37 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்த சந்தன மரம் ஒன்றை, பட்டவர்த்தியை சேர்ந்த சின்னசாமி, 57, தனசேகர் ஆகியோர் வெட்டி பதுக்கி உள்ளனர். பின், அதை அதே பகுதியை சேர்ந்த, கிருஷ்ணன் என்பவருக்கு விற்றுள்ளனர்.
தகவலறிந்த மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார் மற்றும் வனத்துறையினர் கடந்த, 7ல், சின்னசாமி, தனசேகர் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். சந்தன மரத்தை வெட்டி விற்ற, 2 பேருக்கும், தலா, 25,000 ரூபாய் வீதம் என, மொத்தம், 50,000 ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள கிருஷ்ணனை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.