/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவி உட்பட 2 பேர் மாயம்
/
அரசு பள்ளி மாணவி உட்பட 2 பேர் மாயம்
ADDED : அக் 02, 2024 01:52 AM
அரசு பள்ளி மாணவி
உட்பட 2 பேர் மாயம்
ஓசூர், அக். 2-
ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். கடந்த, 29 காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் அவரது தாய் கொடுத்த புகாரில், ஓசூர் அருகே பொன்னல்நத்தத்தை சேர்ந்த திம்மராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; கடந்த, 20 காலை, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பீராஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார்
விசாரிக்கின்றனர்.