/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தரைப்பாலத்தில் வேன் மோதல் மாணவர் உட்பட 2 பேர் பலி
/
தரைப்பாலத்தில் வேன் மோதல் மாணவர் உட்பட 2 பேர் பலி
ADDED : ஆக 04, 2025 08:39 AM
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, தரை பாலத்தில் பிக்கப்வேன் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவர் உட்பட இருவர் பலியாகினர்.
தர்மபுரி மாவட்டம், குண்டலபட்டியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார், 35, செல்வகுமார், 25. பெயின்டிங் பணி செய்து வந்தனர். இவர்களின் நண்பர், தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவர் யாதவ், 19. இவர்கள் மூவரும் நேற்று காலை, 9:30 மணிக்கு ராயக்கோட்டை பகுதியிலிருந்து, பெயின்டிங் பணியை முடித்து விட்டு, பிக்கப்வேனில், தர்மபுரி நோக்கி சென்றனர். அப்போது, பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் தரைபாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிக்கப் வேனை ஒட்டி வந்த கிருஷ்ணகுமார் துாக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்ததாக தெரிந்தது.
விபத்தில் கிருஷ்ணகுமார் மற்றும் கல்லுாரி மாணவர் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இறந்தவர்களின் உடலை மீட்ட பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.படுகாயமடைந்த செல்வகுமாரை தர்மபுரியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.