/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரில் ரூ.5.54 லட்சம் மதிப்புள்ள 'புகையிலை' கடத்திய 2 பேர் கைது
/
காரில் ரூ.5.54 லட்சம் மதிப்புள்ள 'புகையிலை' கடத்திய 2 பேர் கைது
காரில் ரூ.5.54 லட்சம் மதிப்புள்ள 'புகையிலை' கடத்திய 2 பேர் கைது
காரில் ரூ.5.54 லட்சம் மதிப்புள்ள 'புகையிலை' கடத்திய 2 பேர் கைது
ADDED : பிப் 13, 2024 12:22 PM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் மொத்தம், 5.54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை, காரில் கடத்திய, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை, அவ்வழியாக வந்த, மகேந்திரா எக்ஸ்.யூ.வி., காரை தொப்பூர் போலீசார் நிறுத்தியபோது, அதன் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பினார். போலீசார் காரை சோதனை செய்ததில், 59 மூட்டைகளில், 555 கிலோ எடை கொண்ட, 3.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்ததை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
அதேபோல், தர்மபுரி டவுன் போலீசார், ஓசூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த, இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில், 111 கிலோ எடையில், 1.79 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், காரிலிருந்த குஜராத்தை சேர்ந்த கரண்குமார், 25, ராஜஸ்தானை சேர்ந்த விக்ரம்குமார், 21, ஆகிய இருவரை கைது செய்தனர்.