/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.8 லட்சம் மதிப்பிலான 2 டன் மின் கம்பி திருட்டு
/
ரூ.8 லட்சம் மதிப்பிலான 2 டன் மின் கம்பி திருட்டு
ADDED : பிப் 11, 2025 07:19 AM
பாப்பிரெட்டிப்பட்டி: : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தில் உள்ள மின்வாரிய அலுவலக கிடங்கில், 2 டன்
அலுமினிய மின் கம்பிகள் உள்-ளிட்ட பொருட்கள் நேற்று முன்தினம் இரவு திருடு போயின.நேற்று காலை அலுவலகத்தை துாய்மை செய்ய வந்த அப்பகு-தியை சேர்ந்த தேவி என்பவர்,
அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு, இளநிலை பொறியாளர்
குமரவேலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அலுவலகம் வந்து பார்த்தபோது, 8 லட்சம் ரூபாய்
மதிப்பிலான  மின் கம்பிகள் திருடு போனது தெரியவந்தது. புகார் படி, அரூர் டி.எஸ்.பி., பொறுப்பு ராஜா
சோமசுந்தரம் மற்றும் பொம்மிடி போலீசார் சம்-பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.ஏற்கனவே பொம்மிடி, கடத்துார் மின் வாரிய அலுவலகத்தில், இதேபோன்று மின் கம்பிகள் சில
மாதங்களுக்கு முன்பு திருடு போனது குறிப்பிடத்தக்கது.

