ADDED : ஏப் 07, 2026 02:10 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம், காரிமங்கலம் அருகே, கெங்குசெட்டிப்பட்டி ஏரியில் கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய, பொக்லைன் மற்றும் டிராக்டரை, தாசில்தார் சிவகுமார் பறிமுதல் செய்தார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாசில்தார் சிவகுமாருக்கு பைசுஹள்ளி அருகே, ஏரிகளில் இரவு நேரத்தில் கிராவல் மண் கடத்துவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு தாசில்தார் சிவகுமார் கெங்குசெட்டிபட்டி ஏரிக்கு சென்றபோது, அங்கு பொக்லைன் மற்றும் டிராக்டர் மூலம் கிராவல் மண் கடத்த முயன்றது தெரியவந்தது. டிரைவர்கள் தப்பிச்சென்ற நிலையில், இரண்டு வாகனத்தையும் பறிமுதல் செய்து, போலீசில்
ஒப்படைத்தார். புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
