/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
/
மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜன 29, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் இளையசெல்வி கடந்த, 26 அன்று இரவு, 7:00 மணிக்கு தர்மபுரி அடுத்த, குப்பூர் பஞ்., பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, அண்ணசாகரத்தான் கொட்டாயில் பட்டா நிலத்தில் இருந்து உரிய அனுமதியின்றி செங்கல் சூளைக்கு மண் எடுப்பது தெரிந்தது.
வாகனங்களை தடுத்து நிறுத்தியபோது, அதன் ஓட்டுனர்கள் தப்பிச்சென்றனர். இதில், மண் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

