/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
ADDED : மே 13, 2025 01:47 AM
தர்மபுரி,:தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த பெலமாரணஹள்ளியை சேர்ந்தவர் சாமிதுரை, மாற்றுத்திறனாளி; இவரது மனைவி முருகம்மாள், 26. தம்பதியருக்கு, தேவசேனா, 8, வருண், 2, என ஒரு மகள், மகன் உள்ளனர்.
முருகம்மாள் கூலி வேலைக்கு வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே தேவசேனாவும், வருணும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, தேவசேனா சற்று நேரம் வீட்டின் பின்புறம் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது வருணை காணவில்லை. அவரது தந்தை சாமிதுரை மற்றும் அக்கம், பக்கத்தினர் அப்பகுதி முழுவதும் தேடினர்.
இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் வருண் தவறி விழுந்து கிடந்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். புகார்படி மாரண்டஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்