/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுமி பாலியல் பலாத்காரம் பூ வியாபாரிக்கு '20 ஆண்டு'
/
சிறுமி பாலியல் பலாத்காரம் பூ வியாபாரிக்கு '20 ஆண்டு'
சிறுமி பாலியல் பலாத்காரம் பூ வியாபாரிக்கு '20 ஆண்டு'
சிறுமி பாலியல் பலாத்காரம் பூ வியாபாரிக்கு '20 ஆண்டு'
ADDED : செப் 27, 2024 01:31 AM
சிறுமி பாலியல் பலாத்காரம்
பூ வியாபாரிக்கு '20 ஆண்டு'
தர்மபுரி, செப். 27-
தர்மபுரியில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பூ வியாபாரிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் பூ வியாபாரி பெரியசாமி, 31. இவர், 11 வயது சிறுமி ஒருவருக்கு அவ்வப்போது சாக்லேட் வாங்கி கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த பெற்றோர் புகார் படி கடந்த, 2020 ல் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு, தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில், பெரியசாமிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.