/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் குரூப் 2 தேர்வு 20,109 பேர் எழுதவுள்ளனர்
/
தர்மபுரியில் குரூப் 2 தேர்வு 20,109 பேர் எழுதவுள்ளனர்
தர்மபுரியில் குரூப் 2 தேர்வு 20,109 பேர் எழுதவுள்ளனர்
தர்மபுரியில் குரூப் 2 தேர்வு 20,109 பேர் எழுதவுள்ளனர்
ADDED : செப் 27, 2025 01:31 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில், 20,109 பேர்
எழுதவுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- குரூப் 2 மற்றம் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 65 தேர்வு மையங்களில், 20,109 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். தேர்வினை கண்காணிக்க, 4 பறக்கும்படை அலுவலர்கள், 14 நடமாடும் குழுக்கள் மற்றும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம், 65 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில், தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் பஸ்கள் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மையத்திற்கு செல்லவும், கடைசி நேர அலைச்சல்களை தவிர்த்து கொள்ள வேண்டும். மேலும், தேர்வு நாளன்று தேர்வர்கள் காலை, 8:30 முதல், 9:00 மணி வரை மட்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.