ADDED : ஜூலை 22, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மண்ணேரி சஞ்சீவிபுரத்தில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் படி, பாப்பாரப்பட்டி எஸ்.ஐ., மாரி தலைமையில் போலீசார், சஞ்சீவி புரம் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த அருள் 24, மற்றும் சேகர், 36 வீட்டிலும், அவர்களுக்கு சொந்தமான டாடா ஏஸ் வாகனத்திலும், 13 மூட்டைகளில் இருந்த, 220 கிலோ குட்காவை கண்டுபிடித்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான அருள் மற்றும் சேகரை தேடி வருகின்றனர்.