/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மருத்துவ கல்வியில் 23 ஆண்டு சாதனை 'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி
/
மருத்துவ கல்வியில் 23 ஆண்டு சாதனை 'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி
மருத்துவ கல்வியில் 23 ஆண்டு சாதனை 'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி
மருத்துவ கல்வியில் 23 ஆண்டு சாதனை 'விம்ஸ்' அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி
ADDED : ஜூன் 15, 2025 01:59 AM
மருத்துவத்துறை சார்ந்த கல்வி சேவையில், 23 ஆண்டுகளாக சாதனையை ஏற்படுத்தி கோலோச்சி வரும் விநாயகா மிஷன் பல்கலையின் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனுாரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளின் சிறப்பம்சங்கள் குறித்து வேந்தர் கணேசன், டீன் மற்றும் இயக்குனர் பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:
மாணவர்களின் மருத்துவ கனவையும், வேலைவாய்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், மருத்துவத்துறை சார்ந்த படிப்பை தகுதிவாய்ந்த பேராசிரியர்களை கொண்டு, 23 ஆண்டுகளாக எங்கள் கல்லுாரி மூலம் வழங்கி வருகிறோம். எங்கள் கல்வி சார்ந்த சேவை, சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக, பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் மூலம் பல்வேறு தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ளோம்.
குறிப்பாக, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் மூலம், 'ஏ' தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் தர கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியாவின், டி.யூ.வி., எஸ்.யூ.டி., அமைப்பால் எங்கள் கல்வித்தரம் ஆராயப்பட்டு சர்வதேச தரநிலை மேலாண்மை மறு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தரசான்றிதழை பெற்ற முதல் கல்லுாரி எங்களுடையதே.
மாணவர்களின் கல்லுாரி மற்றும் கல்வி சார்ந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த உள்கட்டமைப்பு வகுப்பறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நுாலக வசதி, மருத்துவ பயிற்சியை எளிதாக்கும் வகையில் தனிப்பட்ட ஆய்வக வசதிகள், பட்டய படிப்புடன் கூடிய துறை ரீதியான கூடுதல் சான்றிதழ் படிப்புகள், வேலைவாய்ப்பிற்கு அடித்தளமிடும் வகையில் மென்திறன் சார்ந்த தனிப்பட்ட பயிற்சிகள், உள் விளையாட்டு அரங்குகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தனித்தன்மையுடன் வழங்கி வருகிறோம்.
சிறந்த மதிப்பெண் பெற்று, குடும்ப சூழ்நிலை காரணமாக பின் தங்கியுள்ள மாணவர்களை ஊக்குவித்து உதவும் வகையில் ஆண்டுதோறும் அவர்களுக்கு அன்னபூரணி கல்வி உதவித்தொகை மற்றும் சண்முகசுந்தரம் உதவித்தொகை கல்லுாரி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசின் புதுமைப்பெண் உதவித்தொகை மற்றும் தமிழ் புதல்வன் உதவித்தொகை பெறவும் வழிவகை செய்து வருகிறோம். மாணவர்கள் மருத்துவ பயிற்சி பெறும் காலங்களிலேயே அதற்கான தொகுப்பூதியம் பெறவும் வழிவகை செய்து வருகிறோம்.
மருத்துவமனைகளிலும், மருத்துவத்துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பை வளாகத்தேர்வு மூலம் அளித்து வருகிறோம். கடந்தாண்டு, 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வளாக தேர்வில் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவர்களின் தொழில் முனைவோர் கனவை நினைவாக்கும் வகையில், அவர்களுக்கான தொழில்துறை சார்ந்த பயிற்சியும், வழிகாட்டுதலும் துறையின் தொழில் முனைவோர் அமைப்பு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் ஆராய்ச்சி திறனையும், புதுமை கண்டுபிடிப்புகள் சார்ந்த திறனையும் ஊக்குவித்து வழிநடத்தும் விதமாக கல்லுாரியின் புதுமை கண்டுபிடிப்பு அமைப்பு சார்பில் பல்வேறு பயிற்சிகளும், அதை சார்ந்த கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் தொழில்துறை சார்ந்த திறனை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் துறை ரீதியான தொழில்துறை சார்ந்த சுற்றுலாவுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர்.
மேலும், மாணவர்களின் துறை ரீதியான சமீபத்திய வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த வல்லுநர்களை கொண்டு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.
ஒரு கல்வி நிறுவனத்தின் தலையாய கடமையானது மாணவர்களுக்கு கல்வியை மட்டும் வழங்குவதல்ல, அவர்களை சமுதாயத்தில் சிறந்த பொறுப்புள்ள குடிமகனாக மாற்றுவதாகும். அதன்படி, எங்கள் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை போன்ற பல்வேறு சமுதாய நலத்திட்ட சார்ந்த அமைப்புகள் மூலம் அவர்களுக்கான சமூக பொறுப்புகளை உணர்த்தி ஊக்குவித்து சமூக நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தி
வருகிறோம்.
அதன் பயனாக சமீபத்தில் நடந்த தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் எங்கள் கல்லுாரியை சேர்ந்த மாணவியும் பங்கேற்றார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.