ADDED : ஏப் 08, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மூன்றாம்பட்டி பஞ்., பொம்மதாசன்பட்டி, கெங்கப்பிராம்பட்டி பஞ்., மன்னாண்டியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, ஊத்தங்கரை, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் முன்னிலையில் தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.
இதில், தி.மு.க., ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், நிர்வாகிகள் சத்தியநாராயண மூர்த்தி, சிவகுமார், அசோக்குமார், கற்பூர சுந்தரபாண்டியன், சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள்
உடனிருந்தனர்.
