/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு
/
வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு
ADDED : டிச 02, 2024 03:41 AM
பாப்பிரெட்டிப்பட்டி,: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் ஏற்காடு மலையிலிருந்து வினாடிக்கு, 2,661 கன அடி நீர்வரத்து உள்-ளதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்கிறது. 65.27 அடி உயர அணையில் நீர்மட்டம், 64.26 அடியாக உள்ளது.
அணை பாதுகாப்பு கருதி, நேற்று காலை வினாடிக்கு, 2,500 கன அடி தண்ணீர், 3 மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்-டுள்ளது. இதனால் வெங்கடசமுத்திரம், ஓந்தியாம்பட்டி, ஆலா-புரம், தென்கரைகோட்டை, பறையப்பட்டி, ஏரிகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.நீர்திறப்பால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாகவும், தங்க-ளது கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் விடாமல் பாதுகாப்-பான பகுதிகளில் வைத்துக் கொள்ளவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.