/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு
/
வாணியாறு அணையில் 2,500 கன அடி நீர் திறப்பு
ADDED : டிச 03, 2024 01:42 AM
வாணியாறு அணையில்
2,500 கன அடி நீர் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 2---
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் ஏற்காடு மலையிலிருந்து வினாடிக்கு, 2,661 கன அடி நீர்வரத்து உள்ளதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்கிறது. 65.27 அடி உயர அணையில் நீர்மட்டம், 64.26 அடியாக உள்ளது.
அணை பாதுகாப்பு கருதி, நேற்று காலை வினாடிக்கு, 2,500 கன அடி தண்ணீர், 3 மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெங்கடசமுத்திரம், ஓந்தியாம்பட்டி, ஆலாபுரம், தென்கரைகோட்டை, பறையப்பட்டி, ஏரிகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்திறப்பால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாகவும், தங்களது கால்நடைகளை ஆற்றுப்பகுதியில் விடாமல் பாதுகாப்பான பகுதிகளில் வைத்துக் கொள்ளவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.