/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பொறியியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
/
அரசு பொறியியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
ADDED : மார் 04, 2024 07:39 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், செட்டிகரையிலுள்ள, அரசு பொறியியல் கல்லுாரியில், 2வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவன இயக்குனர் சுந்தரம், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில், அமைப்பியல் துறையில் இருந்து, 67, மாணவர்கள், இயந்திரவியல் துறையில், 60 பேர்; மின்னியல் துறையில், 71 பேர்; மின்னணுவியல் துறையில், 56 பேர்; கணினி அறிவியல் துறையில், 91 பேர் என மொத்தம், 345 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார், அமைப்பியல் துறை தலைவர் ராஜ்குமார், கணினி அறிவியல் துறை தலைவர் மிராக்ளின் ஜாய்ஸ் பமிலா, மின்னணுவியல் துறை தலைவர் அமினா பிபி, இயந்திரவியல் துறை தலைவர் ராஜேஸ்வரி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

