/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பென்னாகரத்தில் 2ம் கட்டமாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
/
பென்னாகரத்தில் 2ம் கட்டமாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
பென்னாகரத்தில் 2ம் கட்டமாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
பென்னாகரத்தில் 2ம் கட்டமாக 'உங்களை தேடி உங்கள் ஊரில்'
ADDED : டிச 13, 2024 01:12 AM
தர்மபுரி, டிச. 13-
பென்னாகரத்தில், 2ம் கட்டமாக, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடக்க உள்ளது.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்களை நாடி, அவர்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம். இத்திட்டம், ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்தில், 2ம் கட்டமாக வரும், 18 அன்று பென்னாகரம் வட்டத்தில் காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. இதில், வருவாய் வட்டத்தில் இருந்து கள தணிக்கையில் ஈடுபட்டு, அரசு திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர். அன்று பகல், 3:30 மணிக்கு மேல் பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கள ஆய்வில் இருக்கும் மாவட்டத்தின் முதல்நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடக்க உள்ளது. மாலை, 4:00 மணிக்கு மேல் அரசு திட்டங்களை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்த்தல் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் பெற உள்ளனர். இதில், பென்னாகரம் வட்டத்திலுள்ள, 4 உள்வட்ட ஆர்.ஐ.,க்கள் அலுவலகத்தில், சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடக்க உள்ளது. எனவே, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல் மனுக்களை அளித்து, உடனடியாக தீர்வு காணலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.