ADDED : மே 26, 2026 08:55 AM
தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அடவிசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா, 19. இவர் தர்மபுரி அரசு கலைக்கல்-லாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
தர்மபுரியில் உள்ள கல்லுாரி மாணவியர் விடு-தியில் தங்கியிருந்தார். கடந்த, 21ம் தேதி மாய-மானார். அதியமான்கோட்டை போலீசார் விசா-ரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொம்-பரகாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சர்மிளா, 19. இவர், தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்-லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாயமானார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். பென்னாகரம் தாலுகா, அரகாசனஹள்ளி கிரா-மத்தை சேர்ந்தவர் லாவண்யா, 19. இவர் நல்லம்-பள்ளி அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த ஏப்., 11-ம் தேதி மாயமானார். ஏற்கனவே கடந்த, 2025 ஜூன், 24ம் தேதி அவர் மாயமானது குறித்து, பெரும்பாலை போலீசார் கவின், 24 என்-பவர் மீது, போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசார-ணையில் உள்ளது. இந்நிலையில், மாணவி மாயம் குறித்து, பெரும்பாலை போலீசார் விசா-ரிக்கின்றனர்.
