ADDED : மே 06, 2026 03:50 AM
அ நிறம் | அளவு
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, ஜக்கசமுத்திரத்தை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி-, 74. தர்மபுரி, பிடமனேரியை சேர்ந்த துரைசாமி, 60, என்பவர், முனுசாமியின் தோட்டத்தில் வேலை பார்த்தார்.
நேற்று முன்தினம் மாலை, தோட்டத்தில் மின் கம்பி அறுந்து கிடந்தது. கவனிக்காமல், அங்கு சென்ற முனுசாமி, துரைசாமி ஆகியோர், மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பாரிவள்ளல், 52, என்பவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
