/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெவ்வேறு இடங்களில்3 இளம்பெண்கள் மாயம்
/
வெவ்வேறு இடங்களில்3 இளம்பெண்கள் மாயம்
ADDED : ஆக 21, 2025 01:51 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, கடகத்துார் பே.மாரியம்மன் கோவில் கொட்டாயை சேர்ந்தவர் நேத்ரா, 20. பட்டதாரியான இவர் கடந்த, 19 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
நல்லம்பள்ளி அஞ்சலக தெருவை சேர்ந்தவர் மல்லிகா, 38, இவருக்கு திருமணமாகி, ஜெகேஷ் என்ற கணவர், இரு மகன்கள் உள்ளனர். கடந்த, 16 அன்று கோவிலுக்கு செல்வதாக வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு சென்ற மல்லிகா மாயமானார். அவரது கணவர் ஜெகேஷ் புகார் படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலக்கோடு தாலுகா, கே.செட்டிஹள்ளியை சேர்ந்தவர் சுகன்யா, 23. இவருக்கு திருமணமான நிலையில், பாலக்கோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட ஸ்டோரில் வேலை செய்து வந்தவர் கடந்த, 18 அன்று மாயமானார். அவரது கணவர் லட்சுமணன் புகார் படி, பாப்பாரபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.