ADDED : மே 30, 2026 04:23 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், முக்கல்நாயக்கன்பட்டி கிரா-மத்தை சேர்ந்த ஹரிணி, 19. இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 27ம் தேதி கல்லுா-ரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார்-படி, அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்-கின்றனர்.
தர்மபுரி அடுத்துள்ள மாரவாடி கிராமத்தை சேர்ந்த ஹாசிணி, 19. இவர் சேலம் மாவட்டத்தி-லுள்ள தனியார் கல்லுாரியில் மெடிக்கல் இன்ஜி-னியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 22ம் தேதி கல்லுாரியில் இருந்து, வீட்டிற்கு வந்தார். கடந்த, 26ம் தேதி மாயமானார். புகார்படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பென்னாகரம் தாலுகா, ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்த காவ்யா, 20. இவர் தர்மபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாயாமானார். பெற்றோர் புகார்படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
