UPDATED : நவ 27, 2026 05:58 AM
ADDED : நவ 27, 2026 05:31 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை எஸ்.ஐ., புஷ்பாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம்,பெருமாள்கோவில்மடுவு அருகில் ரோந்து சென்றனர்.
அங்கு, கஞ்சா வைத்திருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த மாதன், 20, என்பவரை கைது செய்தனர். அதேபோல், நல்லம்பள்ளி அடுத்த வள்ளூவர் நகரைச் சேர்ந்த ரஞ்சித், 19, மற்றும் லக்கியம்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன், ஆகியோரை, கஞ்சா வழக்கில் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
