/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 300 பேருக்கு கண் அறுவை சிகிச்சை
/
அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 300 பேருக்கு கண் அறுவை சிகிச்சை
அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 300 பேருக்கு கண் அறுவை சிகிச்சை
அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 300 பேருக்கு கண் அறுவை சிகிச்சை
ADDED : மே 29, 2024 07:37 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கடந்த ஆண்டு மே மாதம், அரசு கண் சிகிச்சை மருத்துவமனை தொடங்கப்பட்டு, ஓர் ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, 2ம் ஆண்டு துவக்க விழா தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், தர்மபுரி ஊரக வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி பேசியதாவது:பாலக்கோடு பகுதிக்கு, தர்மபுரி கலெக்டர் சாந்தியின் தீவிர முயற்சியால், கடந்தாண்டு புதிதாக, அரசு கண் சிகிச்சை மருத்துவமனை திறக்கப்பட்டது. இங்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், அதிநவீன பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை சாதனங்களுடன் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த வருடத்தில் மட்டும், கண்புரை மற்றும் கண் சதை வளர்ச்சி அறுவை சிகிச்சை என, 300 கண் நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள் தீர்க்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு கண் சிகிச்சை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். பின், மருத்துவர் ஷாலினி, செவிலியர்கள் கோகிலா, மதீனா, லட்சுமி காயத்திரி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினார். இதில், மருத்துவர்கள் செந்தில்குமார், ஜெகதீசன், சசிரேகா மருந்தாளுனர்கள் முத்துசாமி, முருகேசன் கலந்து கொண்டனர்.