ADDED : செப் 05, 2026 03:22 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், வெங்கடசமுத்திரத்தைச் சேர்ந்தவர் இமாம் பாஷா, 45, பைக் மெக்கானிக். அதே பகுதியில் பைக் பட்டறை வைத்துள்ளார்.
நேற்று காலை, கடை அருகில், மர்ம நபர்கள் சிலர் குப்பைக்கு தீ வைத்ததில், பைக் பட்டறைக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள், ஒரு மணிநேரம் போராடி, தீயை அணைத்தனர். இதில், 32 பைக்குகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு, பல லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
