/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் ரூ.32.92 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
தர்மபுரியில் ரூ.32.92 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தர்மபுரியில் ரூ.32.92 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தர்மபுரியில் ரூ.32.92 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : பிப் 17, 2024 12:35 PM
தர்மபுரி: தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம், நேற்று வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில், தர்மபுரி நகராட்சி சார்பில், 161 பயனாளிகளுக்கு சாலையோர வியாபாரிகளுக்கான கடன், சொத்துவரி மற்றும் வரி நிர்ணயம் செய்தல், சான்றிதழ்களில் பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட சேவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மின்துறை சார்பில், 145 பயனாளிகளுக்கு மின் இணைப்பு, பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், வருவாய்த்துறை சார்பில், 166 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், இருப்பிட சான்றிதழ், வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 200 பேருக்கு, 50,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம், 827 பயனாளிகளுக்கு, 32.92 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.