/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 33 பேர் படுகாயம்; 7 பேர் கால் முறிவு
/
பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 33 பேர் படுகாயம்; 7 பேர் கால் முறிவு
பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 33 பேர் படுகாயம்; 7 பேர் கால் முறிவு
பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 33 பேர் படுகாயம்; 7 பேர் கால் முறிவு
ADDED : மார் 29, 2025 07:32 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் ஊத்தங்கரை நோக்கிச் சென்ற ஏ.பி.ஜி., தனியார் பஸ்சும், கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற ஊத்தங்கரை அரசு பஸ்சும் நேற்று மாலை, 4:30 மணிக்கு நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரண்டு பஸ்களிலும் பயணம் செய்த, 33 பேர் படுகாயமடைந்தனர். இதில், தனியார் பஸ் டிரைவர் உள்பட 7 பேருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது.
தனியார் பஸ் டிரைவர் இருக்கையிலே சிக்கிக் கொண்டதால், இரண்டு கால்களும் முறிந்தன. பொக்லைன் கொண்டு போராடி மீட்டனர். டிரைவர் கல்லாவி பகுதியை சேர்ந்த கார்த்திக், 33, என்-பது தெரியவந்தது. அரசு பஸ் டிரைவர் விஜயகாந்தன், 39, லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.விபத்தில், திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளியை சேர்ந்த ஜோதி, 35, ஊத்தங்கரைஅடுத்த கோடாலவலசை சேர்ந்த கோவிந்தன், 30, கஸ்துாரி, 50, ஊத்தங்கரை சுபலட்சுமி, 19, பென்-னாகரம் தீபக், 29, சிங்காரப்பேட்டை பாத்திமா, 35, பாவஜான், 62, நேருநிஷா, 45, எட்டிப்பட்டி சித்ரா, 40, குப்பம் சரவணன், 44, திருவண்ணாமலை விஜயன், 58, உள்பட 33 பேர் காயமடைந்-தனர். ஊத்தங்கரை, சாமல்பட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொது-மக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தரைப்பாலத்தின் பக்கவாட்டு பகுதி-களில் ஊற்று நீர் சுரப்பதால் சாலையில் தேங்கி பாசி படர்ந்துள்-ளது. சாலையின் நடுவே ஒரு அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டு கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமாக உள்ளது. இந்நிலையில் வேகமாக வந்த தனியார் பஸ், பிரேக் அடிக்கும் போது, ஒரு பக்கமாக வழுக்கி சென்று எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது தெரியவந்தது. சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.