/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி உழவர் சந்தையில் 37 டன் காய்கறி விற்பனை
/
தர்மபுரி உழவர் சந்தையில் 37 டன் காய்கறி விற்பனை
ADDED : செப் 22, 2024 05:34 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியிலுள்ள உழவர் சந்தையில், புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, 37.38 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாகின.
தர்மபுரி டவுன் உழவர் சந்தையில் வழக்கமாக, நாளொன்றுக்கு, 20 முதல், 25 டன் காய்கறிகள் விற்பனையாகும். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதமிருக்கும் பக்தர்கள், சுவாமிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதன்படி புரட்டாசி முதல்வார சனிக்கிழமையான நேற்று, கூடுதலாக காய்கறிகள் விற்பனையானது.இது குறித்து, தர்மபுரி டவுன் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் கூறுகையில், ''நேற்று அதிகாலை முதல், 135 விவசாயிகள், 7,478 நுகர்வோர் உழவர் சந்தைக்கு வந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும், 35.43 டன் காய்கறிகள், 1.95 டன் பழங்கள் என மொத்தம், 14.94 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது,'' என்றார்.