தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 4 பேர் கைது


ADDED : ஜன 11, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி: சூளகிரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி, 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன்குமார், 38; காமன்தொட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் கடந்த, 7ம் தேதி மதியம் நின்றிருந்தார். அப்போது ஸ்கார்பியோ காரில் வந்த ஐந்து பேர், தங்களை போலீசார் என கூறிய-துடன், 'நீ தான் பிரவீன்குமாரா, உன்னை விசா-ரிக்க வேண்டும்' என கூறியுள்ளனர். அவர் செல்ல மறுத்ததால், சிலர் கீழே இறங்கி வலுக்கட்டாய-மாக காரில் ஏற்றி சென்றனர். ஆனால், போலீஸ் இல்லை என்பது பிரவீன்குமாருக்கு தெரிந்தது. '30 லட்சம்

ரூபாய் கொடுத்தால் விடுவோம்' என கூறிய கும்பல், அவரை தொடர்ந்து காரில் வைத்து மிரட்டி, சேலம் நோக்கி சென்றனர். பல-ரிடம் போன் செய்து பிரவீன்குமார் பணம் கேட்-டுள்ளார். யாரும் பணம் தராததால், அவர்களிடமி-ருந்து தப்பிக்க வழி தேடிய பிரவீன்குமார், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில், தன் காரில் பணம் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் கிருஷ்ணகிரி டோல்கேட் வரை காரில் அழைத்து வந்த கும்பல், அதன் பின் வாடகை காரை வரவழைத்து, பிரவீன்குமாரையும், கும்-பலில் ஒருவரையும் அவருடன் அனுப்பியது. காமன்தொட்டி வந்ததும் காரிலிருந்து இறங்கிய பிரவீன்குமார் தப்பிச்சென்றார். சூளகிரி போலீசில் கடந்த, 8ம் தேதி புகார் செய்தார்.

கிருஷ்ணகிரி டோல்கேட் கேமரா பதிவை வைத்து, வாடகை கார் டிரைவரை பிடித்து விசா-ரித்தனர். வாடகை பணத்தை கூகுள் பேவில் அனுப்பிய நம்பரை வைத்து விசாரித்தனர். இதில் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த மல்லேஷ், 44, கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிந்-தது. இவர் மீது பல்வேறு கடத்தல் வழக்குகள் உள்-ளன. இவருடன் கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் மூலக்காடு நெல்சன், 42; பவானி லட்-சுமி நகர் வரதராஜன், 30; ஈரோடு ராஜசேகர், 50, என நான்கு பேரையும், போலீசார் நேற்று கைது செய்-தனர். ஸ்கார்பியோ காருடன் தலைமறைவான சேலத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us