/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூர் கணவாயில் கோர விபத்து லாரி, கார் தீப்பற்றி 4 பேர் பலி
/
தொப்பூர் கணவாயில் கோர விபத்து லாரி, கார் தீப்பற்றி 4 பேர் பலி
தொப்பூர் கணவாயில் கோர விபத்து லாரி, கார் தீப்பற்றி 4 பேர் பலி
தொப்பூர் கணவாயில் கோர விபத்து லாரி, கார் தீப்பற்றி 4 பேர் பலி
UPDATED : ஜன 25, 2024 01:54 AM
ADDED : ஜன 25, 2024 01:32 AM

தொப்பூர்:கர்நாடகா மாநிலத்திலிருந்து சேலத்தை
நோக்கி நெல்மூடைகள் ஏற்றிய லாரி தொப்பூர் வழியாக நேற்று மாலை சென்றது.
தொப்பூர் இரட்டை பாலத்தின் மீது லாரி சென்று கொண்டிருந்தபோது நெல் மூடை
ஏற்றிச்சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற பார்சல்
சர்வீஸ் கன்டெய்னர் லாரி மீது மோதியது. அந்த லாரி அதற்கு முன்னால்
கெமிக்கல் மூடை பாரத்துடன் சென்ற லாரி மீது மோதியதில் கெமிக்கல் மூடை பாரம்
ஏற்றிச்சென்ற லாரி இரட்டை பாலத்தின் நடுவே உள்ள இடைவெளி பள்ளத்தில்
கவிழ்ந்தது.
இதற்கிடையில் நெல் பாரம் ஏற்றிய லாரி 2 கார்கள் மீது
அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு கார் லாரியின் அடியில் சிக்கியது. அப்போது
லாரியில் பற்றிய தீயில் கார் லாரி இரண்டும் எரியத் தொடங்கின. வாகனங்களில்
சிக்கி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய 4 பேரை தீயணைப்பு வீரர்கள்,
போலீசார் மீட்டு தர்மபுரி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீயில்
கருகிய நிலையில் 3 பேரின் சடலத்தை மீட்டனர்-.
இதில் கெமிக்கல்
மூடை பாரத்துடன் பாலத்தின் இடைவெளி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி டிரைவர்
படுகாயமடைந்தார். மற்றொரு காரில் இருந்த நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை
பகுதியை சேர்ந்த இளங்கோ சதீஷ் நாமக்கல்லை சேர்ந்த கந்தசாமி லேசான
காயங்களுடன் உயிர் தப்பினர்.
லாரிக்கு அடியில் சிக்கி தீப்பற்றிய
காரில் கோவையை சேர்ந்த விமல்குமார் 30 அவர் மனைவி அனுஷ்கா 22 ஜெனிபர் 30
மஞ்சுளா 45 உள்ளிட்ட 8 பேர் பயணித்துள்ளார். இவர்களில் விமல்குமார் அனுஷ்கா
மஞ்சுளா ஆகிய 3 பேர் தீயில் கருகி இறந்தனர். காயமடைந்த 7 பேர் சேலம்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெனிபர் என்பவர்
உயிரிழந்தார்.
காயமடைந்த தர்மபுரி பென்னாகரத்தை சேர்ந்த சின்ராஜ்
மகன் ஸ்ரீதர் 25 இடைப்பாடியை சேர்ந்த சீனிவாசன் ஸ்ரீகாந்த் 20 கேரள மாநிலம்
திருச்சூரை சேர்ந்த அனீஷ் 40 மற்றும் இரு பெண் குழந்தைகள் 10 வயது சிறுவன்
ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செந்தில் 52 சேலம்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.