/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊடேதுர்க்கம் வனத்திற்கு 40 யானைகள் இடம் பெயர்வு
/
ஊடேதுர்க்கம் வனத்திற்கு 40 யானைகள் இடம் பெயர்வு
ADDED : டிச 07, 2025 08:45 AM

ராயக்கோட்டை: ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வனத்திற்கு, 40க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேவநத்தம் வனப்பகுதியில், 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. இவை, இரவில் மல்லேபாளையம், ஒன்னுகுறுக்கை, கம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
நேற்று முன்தினம் இரவு பேவநத்தம் வனத்திலி-ருந்து வெளியேறிய, 40க்கும் மேற்பட்ட யானைகள், லட்சுமிபுரம், பெரியபாலேகுளி வழி-யாக, ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு
உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்-தன. ஏற்கனவே அங்கு, 10க்கும் மேற்பட்ட யானைகள் உள்ள நிலையில், தற்போது அங்கு யானைகள் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துள்ளது.
யானைகள் இடம் பெயர்ந்தபோது, லட்சுமிபுரம் கிராமத்தில் ராகி பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஊடேதுர்க்கம் வனத்திலிருந்து, ஓசூர் சானமாவு அல்லது தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயர வாய்ப்புள்ளது. அதன் நடமாட்டத்தை, ராயக்கோட்டை வனச்சரகர் சக்-திவேல் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

