/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எருதாட்டத்தில் பங்கேற்ற 430 காளைகள்
/
எருதாட்டத்தில் பங்கேற்ற 430 காளைகள்
ADDED : ஜன 18, 2024 02:16 AM
தர்மபுரி:பொங்கலையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் எருதாட்டம் மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதில், போகி பண்டிகை தினத்தில், ஒரு சில இடங்களில், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும், மாட்டுப்பொங்கல் தினத்தில் கோவில்கள் மற்றும் மண்டு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சேர்ந்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்தன. தொடர்ந்து, காணும் பொங்கலான நேற்று, எருதாட்டம் நிகழ்ச்சி மாவட்டம் முழுதும் பெரும்பாலான பகுதிகளில் நடந்தது.
எருதாட்டம் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்புடன், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, அரூர், காரிமங்கலம், லலிகம், பொம்மிடி, கம்பைநல்லுார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தது. இதில் மாவட்டம் முழுதும் மொத்தம், 430 காளைகள் பங்கேற்றன.