தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பொறியியல் கல்லுாரியில் 4வது பட்டமளிப்பு விழா

அரசு பொறியியல் கல்லுாரியில் 4வது பட்டமளிப்பு விழா

அரசு பொறியியல் கல்லுாரியில் 4வது பட்டமளிப்பு விழா


ADDED : ஆக 30, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அருகே, செட்டிகரையில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், 4வது பட்டம-ளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் ரூபி-மீனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுமதி ஆண்டறிக்கையை வாசித்தார்.

இதில், 2025ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற, 217 மாணவ, மாண-வியர் தங்களது இளங்கலை பொறியியல் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இம்மாணவர்கள் ஒட்டு மொத்தமாக, 81 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மேலும், 2025- - 2026 கல்வி-யாண்டில் வேலைவாய்ப்பு நேர்காணல் மூலம், 183 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றனர். விழாவில், பி.என்.ஒய்., முதுநிலை நிதி ஆலோசகர் விஜய் சந்திர-சேகர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள், நிர்வாக பணியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us