ADDED : ஏப் 03, 2025 01:56 AM
அ நிறம் | அளவு
ரூ.5 லட்சம் ¶அபராதம் வசூல்
அரூர்:அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொண்டார். மொத்தம், 327 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 125 வாகனங்களுக்கு, 3.81 லட்சம் ரூபாய் அபராதம், முறையாக வரி செலுத்தாத வாகனங்களிடமிருந்து, 1.26 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. மேலும், 19 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
