ADDED : மார் 18, 2024 03:12 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த குப்பூரில், தர்மபுரி டவுன் எஸ்.ஐ., விஜயசங்கர் ரோந்து சென்றார். அதில், அப்பகுதியில் கண்ணன், 57, என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் சுகர்மில், 4 ரோடு பகுதியில், சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு பணியில் ஏ.பள்ளிப்பட்டி எஸ்.ஐ., செல்வராஜன் ஈடுபட்டார். அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, சாக்கு பையில் மதுபானம் வாங்கி சென்றது தெரிந்தது. இதையடுத்து அம்மாபாளையத்தை சேர்ந்த முத்துகண்ணன், 42, ஏ.பள்ளிப்பட்டி மணி, 49, ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து, 69 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
பொம்மிடி எஸ்.ஐ., விக்னேஷ், நத்தமேட்டில் கூடுதல் விலைக்கு மது விற்ற சுந்தரம்மாள், 56, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த விழுதிப்பட்டி கோம்பைகாட்டில் சாராயம் காய்ச்சிய குட்டியப்பன், 75, என்பவரை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

