/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அனுமதியின்றி பாறைகளை வெட்டி எடுத்த 5 பேர் கைது
/
அனுமதியின்றி பாறைகளை வெட்டி எடுத்த 5 பேர் கைது
ADDED : அக் 02, 2024 01:53 AM
அனுமதியின்றி பாறைகளை வெட்டி எடுத்த 5 பேர் கைது
ஓசூர், அக். 2-
ஓசூர் அருகே, ஜொனபெண்டா பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், உரிய அனுமதி பெறாமல் பாறைகளை வெட்டி எடுப்பதாக, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரேவிற்கு நேற்று தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அவர், 5 பேரை பிடித்து, ஓசூர் டவுன் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். விசாரணையில், ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே கொத்துாரை சேர்ந்த கோவிந்தசாமி, 25, ராஜ்குமார், 23, பிரகாஷ், 23, மற்றும் ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் வசிக்கும், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயணன் நகரை சேர்ந்த சிவக்குமார், 42, மற்றும் லாரி கிளீனர் சந்தோஷ், 22, என தெரிந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார், 3 டிப்பர் லாரிகளை பறிமுதல்
செய்தனர்.