/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடுத்தடுத்து வெடித்த 5 டிரான்ஸ்பார்மர்கள் மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு

ADDED : மார் 20, 2024 10:29 AM
ஓசூர்: ஓசூரில், அடுத்தடுத்த நாட்களில் மொத்தம், 5 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்ததால், மின்தடை ஏற்பட்டது; பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரில் வசிக்கும், 80 குடும்பங்களுக்கு, 40 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் வினியோகம் நடந்தது. கடந்த, 12 ல் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால், மாற்று டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது. அதுவும் ஒரே நாளில் வெடித்து சிதறியது. இப்படியே ஒரே வாரத்தில் மொத்தம், 5 டிரான்ஸ்பார்மர்கள் அடுத்தடுத்து வெடித்து மின்தடை ஏற்பட்டது. இதனால், இரவில் மின்வினியோகமின்றி பொதுமக்களும், பள்ளி பொதுத்தேர்வு நடக்கும் நிலையில் மாணவ, மாணவியரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மின்வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் அப்பகுதி வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகளை சரிபார்த்தனர். அப்போது, 6 வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு மோசமாக இருப்பதும், அதனால், மின்சாரம் ரிட்டன் ஆகி, டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து பழுதானதும் தெரியவந்தது. இதையடுத்து, 6 வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டித்து, 100 கே.வி., திறன் கொண்ட மின் டிரான்ஸ்பார்மரை நேற்றிரவு பொருத்தி, தடையின்றி மின்வினியோகம் செய்தனர். இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர்.