/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
/
அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
ADDED : பிப் 10, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் டவுன் ராமாபுரம், முக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், மருத்துவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் முன்னிலையில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதில், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

