/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு
/
மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு
மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு
மான் வேட்டையாடிய 6 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : டிச 05, 2024 07:13 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தொம்-பக்கல் தொடர்ச்சி காப்புக்காட்டில், சிலர் மானை
வேட்டையாடி, அதை இறைச்சிக்காக அறுத்துக் கொண்டிருந்தனர். தகவலின்படி அங்கு சென்ற அரூர்
வனச்சரகர் நீலகண்டன் உள்ளிட்ட வனத்து-றையினர், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில்,
அவர்கள் வள்ளிமதுரை மற்றும் கோம்பைக்காடுவை சேர்ந்த வெங்கடேஷ், சுரேஷ், வேல்முருகன்,
அண்ணாமலை, சதீஷ்குமார், மற்றொரு சதீஷ்குமார் என தெரிய வந்தது. இதைய-டுத்து, மானின் இறைச்சியை
பறிமுதல் செய்தனர். வேட்-டையில் ஈடுபட்ட வெங்கடேஷ், சுரேஷ் உள்ளிட்ட, 6 பேருக்கும் தலா, 25,000 ரூபாய்
வீதம் என, மொத்தம், 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் உத்தர-விட்டார்.