ADDED : ஜன 03, 2026 07:34 AM

பாலக்கோடு: பாலக்கோடு தாலுகாவில், கூட்டுறவுத்துறை சார்பில், 7 புதிய பகுதி நேர மற்றும் முழுநேர ரேஷன் கடைகளை மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில், 1,057 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்-டுப்பாட்டில், 44 ரேஷன் கடைகள் என மொத்தம், 1,101 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 516 முழுநேர ரேஷன் கடைகள், 585 பகுதிநேர கடைகள் அடங்கும். இவற்றில், 4,75,621 ரேஷன் அட்-டைகள் உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்-பாட்டில், ஜாகீர் வரகூரில் ஒரு புதிய பகுதி நேர ரேஷன் கடையை, மாவட்ட கலெக்டர் சதீஸ் திறந்து வைத்து, முதல் விற்-பனையை தொடங்கி வைத்தார். தி.மு.க., - எம்.பி., மணி, பென்னாகரம்ச பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து, இருளப்பட்டி, தாச-னம்பட்டி, ஜெடையன்கொட்டாய் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய பகுதியில், 5 பகுதிநேர ரேஷன் கடைகள் மற்றும் கொல்லப்பட்டி, ஜோதிஹள்ளி ஆகிய பகு-தியில், 2 முழுநேர ரேஷன் கடைகளை கலெக்டர் திறந்து வைத்தார்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
