/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் ரூ.8.65 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
/
பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் ரூ.8.65 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் ரூ.8.65 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் ரூ.8.65 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
ADDED : அக் 30, 2024 01:18 AM
கிருஷ்ணகிரி,தமிழக உயர் கல்வித்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில், 8.65 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதை, தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாக உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சரயு குத்துவிளக்கேற்றி வைத்து, பின்னர் கூறியதாவது:
விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாக, இந்த உள்விளையாட்டு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இதில், தரைத்தளம் 1846.76 ச.மீ., முதல் தளம், 548.62 ச.மீ., என மொத்தம், 2,395.38 ச.மீ., பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. கூடைப்பந்து, இறகுபந்து, செஸ், டேபிள் டென்னிஸ் விளையாட்டு அரங்குகள், பயிற்சி அளிப்பவர் அறை, ஆண் பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகங்கள், உடற்பயிற்சி அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், நாகோஜனஹள்ளி டவுன் பஞ்., தலைவர் தம்பிதுரை, அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நபீஸா பேகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.