/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்சாரம் பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலி
/
மின்சாரம் பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலி
ADDED : அக் 21, 2024 07:30 AM
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, சின்டெக்ஸ் மினி டேங்க் ஒயரில் மின்சாரம் பாய்ந்ததில், குழந்தை பலியானது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சத்திவேல். இவரின் மனைவி ஐஸ்வர்யா. தம்பதிக்கு மகன் அகிலேஷ், 3; இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. பென்னாகரம் அருகே புதுப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் ஐஸ்வர்யா இருந்தார். நேற்று காலை குழந்தைகள், வீட்டருகே இருந்த சின்டெக்ஸ் மினி டேங்க் அருகில் விளையாடியுள்ளனர். மோட்டாருக்கு செல்லும் மின் ஒயரை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்து அகிலேஷ் துாக்கி வீசப்பட்டான். பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தான். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.