ADDED : ஏப் 24, 2026 05:56 AM

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்துார் சின்ன ஏரி உள்ளது. இதில் மத்துார் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை குவியல்களாக பஞ்., நிர்வாகம் கொட்டி வருகி-றது. அதேபோல் மத்துார் பகுதியிலுள்ள கோழி இறைச்சி கடைக்காரர்கள் அதிகளவு இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர்.
இந்த ஏரியை ஒட்டி இரண்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் உள்ளது. இந்த பாரிலிருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்களை கொட்டுகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மர்ம நபர்கள், தீ வைத்ததில், அந்த குப்பை குவியலுடன், காய்ந்து கிடந்த முட்புதர்-களும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்து விட்டு எரிந்தது. போச்சம்பள்ளி தீய-ணைப்புத்துறை நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர், 2 மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை அணைத்தனர்.
