/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்கு
/
மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்கு
ADDED : ஜன 05, 2025 01:25 AM
தர்மபுரி நகராட்சியுடன், ஏ.ஜெட்டிஹள்ளி பஞ்., இணைப்பதை கண்டித்து, நேற்று முன்தினம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, பழனியம்மாள், 70, என்பவர் தலைமையில் பெண்கள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக, 70 பெண்கள் மீது போலீசார், 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
அதேபோல், தடங்கம் பஞ்., இணைக்க கூடாது என்பதை வலியுறுத்தி, மா.கம்யூ., கிளைச் செயலாளர் ஆதிமூலம் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பழைய அதியமான் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 7 பெண்கள் உட்பட, 10 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.