ADDED : ஜன 16, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அருகே, ஒரே நேரத்தில், 5 குட்டிகள் ஈன்ற ஆடு மற்றும் குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், கிராமப்புறங்களில் விவசாயிகள் ஆடு, மாடு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், மாட்டுப்பொங்கலை நேற்று தமிழகம் முழுவதுமுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கொண்டாடினர். நேற்று, தர்மபுரி அடுத்த நடுப்பட்டியை சேர்ந்த ஜோதி - கவிபிரியா தம்பதி வளர்த்து வந்த ஒரு வெள்ளாடு, 2 பெண், 3 ஆண் என மொத்தம், 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதை நடுப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

